புத்ராஜெயா:
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இந்தக் குண்டுவெடிப்பில் மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் உட்பட குறைந்தது எட்டு நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னணியை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் சென்னையில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“எனவே, பெங்களூருவில் வசிக்கும் மலேசியர்கள், தற்போது நிலவும் நிலைமை குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ளவும், எச்சரிக்கையுடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்வதால் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்களுக்கு, சென்னையில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரகத்தை எண். 7 (பழைய எண். 3) 1வது தெரு, செனோடாப் சாலை தேனாம்பேட்டை, சென்னை 600 018 தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் (0091 44 2433 4434/35/36) மற்றும் மின்னஞ்சல் முகவரி kln.gov.my என்ற முகவரியில் அணுகலாம்.