எந்த ஒரு பொதுக்கூட்டமாயினும் 5 நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும் -தேசிய போலீஸ் படைத்தலைவர்

கிள்ளான்:

பொதுவில் கூட்டம் கூடுவதற்கான அனுமதி தேவையில்லை என்றாலும், அது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினருக்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வழங்க வேண்டும் என்று தேசிய காவல்துறைதலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார்.

இது அமைதியான கூட்டங்கள் சட்டம் 2012 முதல் அமலுக்கு வந்த 10 நாட்களில் இருந்து அறிவிப்பு காலம் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

“சட்டத்தின் பிரிவு 9(1) இன் கீழ், பொதுக்கூட்டம் ஒன்றைத் திட்டமிடும்போது, அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அதன் அமைப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here