கோலாலம்பூர்:
இன்று (மார்ச் 5) அதிகாலை பண்டார் துன் ஹுசைன் ஓன் என்ற இடத்தில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
அதிகாலை 5.13 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தலைகீழாக கவிழ்ந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
“இவ்விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





















