ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை ரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்; முஹிடினின் நிலை என்ன?

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான முஹிடின் யாசின் தொடர்பான 232.5 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மேல்முறையீடு நீதிமன்றம் ரத்து செய்தது.

மேல்முறையீடு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முஹிடின் கூட்டரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் மேல்முறையீடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திடம் திரு முகைதீன் மேல்முறையீடு செய்ய முடியாது என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முஹிடின் தொடர்பான இந்த வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியதால், மேல்முறையீட்டுக்கான ஆக உயரிய அதிகாரம் மேல்முறையீடு நீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, 76 வயதான முஹிடின் யாசின் மலேசியாவின் பிரதமராக இருந்தபோது, அப்பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மூன்று நிறுவனங்களிடமிருந்து 232.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here