தலைவர்களின் திருத்தப்பட்ட AI வீடியோக்களைப் பயன்படுத்தும் மோசடிகளில் விழுந்து விடாதீர்

கோலாலம்பூர்: பொதுமக்களை ஏமாற்றுவதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட தலைவர்களின் வீடியோக்களைப் பயன்படுத்தும் மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சமூக ஊடக பயனர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் லாபகரமான வருமானத்துடன் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி விவாதித்ததைக் காட்டும் வகையில் திருத்தப்பட்ட கிளிப் பரவியதையடுத்து, துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் இந்த நினைவூட்டலை வெளியிட்டார்.

முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு வீடியோ இணைப்பை அனுப்பியதாகவும், அதன் அனைத்து தளங்களிலிருந்தும் கிளிப்பை அகற்றுமாறு கேட்டுக்கொண்டதாக தியோ கூறினார். முதலீடு மோசடி நோக்கத்திற்காக AI உடன் பிரதமரின் வீடியோக்கள் தயாரிக்கப்படுவது குறித்து எனக்கு புகார்கள் வருவது இது முதல் முறையல்ல. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று (மார்ச் 5) ABU டிஜிட்டல் பிராட்காஸ்டிங் சிம்போசியம் 2024 ஐத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியோ, தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அல்லது சமூக ஊடக தள வழங்குநர்கள் AI-உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பற்றி பயனர்களை எச்சரிக்கும் முறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இந்த விஷயத்தில் இந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஊக்குவிக்கப்பட வேண்டும், ஆனால் அவை ஏற்படுத்தும் அபாயங்கள் மற்றும் சவால்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here