மக்களவை தேர்தலில் நானும், கட்சியும் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது என முடிவானது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

இந்நிலையில், ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் நானும் எனது கட்சியும் போட்டியிடவில்லை. தி.மு.க. கூட்டணிக்கு என்னுடைய அனைத்து ஒத்துழைப்பும் இருக்கும். பதவிக்காக விஷயம் இல்லை. நாட்டிற்காக சேர்ந்துள்ளோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here