புனித ரமலான் நோன்புக்காலம் முழுவதும் போதுமான கோழி இறைச்சி விநியோகம் செய்யப்படும்- முகமட் சாபு

கோத்தா கினாபாலு:

புனித ரமலான் மாதம் முழுவதும் மற்றும் நோன்புப்பெருநாள் பண்டிகை காலத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான கோழி இறைச்சி விநியோகத்தை உறுதிச்செய்வதாக வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு உறுதியளித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் சேர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்யும் என்றார்.

சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த சபா அனைத்துலக உணவு கண்காட்சி 2024 (SIFEX2024) நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோழி முட்டை, இறைச்சி விநியோகம் போதுமானதாக இல்லாவிட்டால், தாய்லாந்து மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here