இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா

லோக் சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்து, இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். அருண் கோயல் தனது ஆணையர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here