ராஜ்ய சபா மட்டுமல்ல.. மத்திய அமைச்சர் பதவிக்கும் திட்டம் போட்ட கமல்.. ஒரே கல்லில் 2 மாங்காய்

சென்னை: திமுக கூட்டணியில் இணைந்து உள்ள நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மத்திய அமைச்சராகும் திட்டத்திலும் இருக்கிறாராம். அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ராஜ்ய சபா இடத்தை பயன்படுத்தி கமல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்புகள் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விசிக: அதேபோல் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று விசிக சொன்னதை திமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார். கமல் கூட்டணி: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டு உள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வந்தார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருந்தார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி இருந்தார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசி இருந்தார். ஆனால் தற்போது ராஜ்ய சபா சீட் அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து முடிவு செய்து உள்ளார். கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகின்றன. ராகுலுடன் நெருக்கமாக இருக்கும் இவர் ராஜ்ய சபா வழியாக நாடாளுமன்ற உறுப்பினராகி அப்படியே மத்திய அமைச்சர் ஆவதற்கான திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here