தேசிய ஓட்டப்பந்தய வீரர் முகமட் அஸிம் பாமி, 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக தமது வெளிப்புற முதல் போட்டியில் எதிர்பார்த்த அடைவுநிலையைப் பெறவில்லை என குறிப்பிட்டார்.
முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற எல்லோ ஜாக்கெட் அழைப்புப் போட்டியில் அவர் மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த பந்தயத்தில 19 வயதான முகமட் அஸிம் 10.38 விநாடிகள் பதிவு செய்துள்ளார்.
இந்த நேரப் பதிவானது ஒலிம்பிக் போட்டிக்கு நேர வரம்பைக் காட்டிலும் பின் தங்கியுள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டில் முகமட்அஸிம் 10.09 விநாடிகள் பதிவு செய்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
இது இந்த தவணை தொடக்கத்தில் நான் எதிர்பார்த்த முடிவு கிடையாது.ஆனாலும் கடவுள் நல்லதொரு திட்டத்தை வைத்திருப்பார். மக்கள் கூறுவது போல செயல்பாட்டில் நாம் நம்பிக்கைக் கொள்வோம் என்று முகமட் அஸிம் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்