கோத்தா பாரு:
கடந்த மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை கிளந்தான் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் (Op Tapis) போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 765 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 16 முதல் 67 வயதுக்குட்பட்ட இரு அரசு ஊழியர்கள் உட்பட 744 ஆண்களும் 21 பெண்களும் அடங்குவர் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து RM271,636 மதிப்புள்ள போதைப் பொருட்களில் 19.8 கிலோகிராம் கெத்தும் இலைகள், 152.93 லிட்டர் கெத்தும் பானம் , 11,555.41 கிராம் கஞ்சா, 2,242.98 கிராம் யாபா மாத்திரைகள் மற்றும் 66.4 கிராம் ஹெரோயின் ஆகியவை அடங்கும்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் அவர்களிடமிருந்து RM 242,000 மதிப்புள்ள வாகனங்கள் உட்பட பல்வேறு சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கு அபாயகரமான மருந்துகள் (சொத்து பறிமுதல்) சட்டம் 1988 இன் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.