‘சிட்டாடல்’ வெப் சீரிஸின் போது நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயால் கடுமையாக அவதிப்பட்டதாகக் கூறியுள்ளார். அந்த சமயத்தில் அதீத ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது இன்னும் தனக்கு சிரமமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா மையோசிடிஸ் நோய் தொடர்பாக தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பேசி வருகிறார். தற்போது டேக் 20 என்ற பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். அந்த வகையில் இந்த வார டாப்பிக்காக ஆட்டோ இம்யூனிட்டி பற்றி பேசியுள்ளார் சமந்தா.
குறிப்பாக மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் தான் சிட்டாடல் வெப் சீரிஸ் மற்றும் குஷி படத்தில் பிஸியாக நடித்ததாகவும் கூறினார். இது மட்டுமில்லாமல் அந்த சமயத்தில் மிக அதிகமான ஆக்சன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதாகவும் அதனால்தான் அந்தப் படத்தில் நன்றாக நடித்து பாஸ் ஆனேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சினிமாவில் இருந்து பிரேக் அடித்தது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, ”நான் ஒரே சமயத்தில் 10 வேலைகளை செய்வேன். ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்குவேன். நான் ஆக்டிவாக இருந்தேன். இது தான் நான் !ஆனால், நான் இந்த சமயத்தில் கற்றுக் கொண்டது என்னவென்றால் நீங்கள் ஒரு விஷயத்தில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பது என்பது நிச்சயமாக உங்களுடைய வீக்னஸ் கிடையாது. உங்கள் மனதிற்கும் உடலுக்குமான பூஸ்ட் அது என்பதை புரிந்து கொண்டேன்” எனவும் கூறியுள்ளார்.