ஆடம்பரப் பொருகளுக்கான சொகுசு வரி ஒத்திவைப்பு; நகை வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு

Staff is seen arranging the gold and jewelries at SMS Deen Jewellers in Jalan Masjid India on April 12 for story on gold and luxury items tax.—AZMAN GHANI/The Star

கோலாலம்பூர்:

உயர் விலை மதிப்புள்ள மற்றும் ஆடம்பர பொருள்களுக்கான வரி (சொகுசு வரி) நடைமுறைப்படுத்தப்படுவதை அரசாங்கம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

இந்த HVGT வரி இவ்வாண்டு மே மாதம் 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், HVGT-யை மே 1-ம் தேதி முதல் அமல்படுத்தும் திட்டம் தொடர்பில், நிதி அமைச்சகம் இன்னும் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யாததால், அது காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று (மார்ச் 28) அறிவித்தது.

இதனை துணை நிதி அமைச்சர் லிம் ஹுவி யிங் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து மலேசிய வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வரி மூலம் மலேசியாவுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு சொகுசு வரி சொல்லிக்கொள்ளும் அளவில் பங்களிக்காது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

அதற்குப் பதிலாக பொருள், சேவை வரி வடிவில் மேம்படுத்தப்பட்ட வரி முறையை நடைமுறைப்படுத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here