தலைநகரின் பல பகுதிகளில் பலத்த காற்று; மரங்கள் விழுந்ததில் 14 வாகனங்கள், 3 வீடுகள் சேதம்

கோலாலம்பூர்:

திடிரென ஏற்பட்ட பலத்த காற்றினால் தலைநகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மாலை 6 மணியளவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சுமார் எட்டு பகுதிகளில் மரங்கள் விழுந்ததாகவும், அவற்றில் பல மரங்கள் வாகனங்களின் மேல் விழுந்ததால் அவை சேதமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு துறை நேற்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியது.

புக்கிட் ஜாலீல் விளையாட்டு பள்ளி அருகே விழுந்த மரங்களால் குறைந்தது ஐந்து கார்கள் சேதமடைந்தன, மேடான் நியாகாவில் ஜாலான் தாசிக் உத்தாமா 6 இல் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன என்றும், ஜாலான் ராடின் மற்றும் ஜாலான் 2/127 ஜாலான் கூச்சாய் லாமாவில் முறையே ஒன்று மற்றும் இரண்டு கார்கள் சேதமடைந்ததுடன் பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ராடின் அனுமிலில் நான்கு கார்கள் சேதமடைந்தன.

இதற்கிடையில் இந்த பலத்த காற்று காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here