சிலாங்கூர் மாநில அம்னோவின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார் தெங்கு ஜஃப்ருல்!

கோலாலம்பூர்:

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் சிலாங்கூர் மாநில அம்னோ பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அம்னோ தலைவர் மற்றும் அதன் உச்ச மன்ற தலைவர்கள் அனைவரும் இணைந்து கட்சியை புத்துயிர் பெறச் செய்வதற்கான திட்டங்களைத் தொடர்ந்து வகுத்துள்ளனர் என்று ஜஃப்ருல் கூறினார்.

“எனது அணுகுமுறை மற்றும் கொள்கைகள் எளிமையானவை, எந்தவொரு நேர்மறையான மாற்றங்களுக்கும் அல்லது மேம்பாடுகளுக்கும் என்னால் பங்களிக்க முடியாவிட்டால், ஒரு பொறுப்பான பதவியை நான் வகிப்பது சிறந்த முறையல்ல.

“எனவே சில்லங்கூர் மாநில அம்னோவின் மறுமலர்ச்சிக்கு மிகவும் திறம்பட பங்களிக்கக்கூடிய நபருக்கு வழிவிடும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக” அவர் கூறினார்.

“எனவே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்,” என்று அவர் இன்று (ஏப்ரல் 1) வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here