கோலாலம்பூர்:
பெட்டாலிங் ஜெயா, சீ பார்க்கில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக வெளிநாட்டவர் ஒருவருக்கு எதிராக பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 304வது பிரிவின்படி அந்த வெளிநாட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷாருல் நிஜாம் ஜாபர்@இஸ்மாயில் கூறினார்.
முன்னதாக, சீ பார்க்கில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் பாதிக்கப்பட்ட ஆடவரை சந்தேக நபரான வெளிநாட்டவர் இடித்துவிட்டார், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவருக்கும் மூண்ட சண்டையில், குறித்த வெளிநாட்டவர் பாருக்கப்பட்டவரின் முகத்தில் ஓங்கிக் குத்தியதில் மற்றைய ஆடவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.