கடினமான தருணத்தில்  பொறுமையாக இருங்கள்

கடினமான தருணங்களில் பொறுமையாக இருங்கள். இதுவே, லண்டனில் நடைபெற்ற கில்லன் மார்கெட்ஸ் ஸ்குவாஷ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்றிய எஸ். சிவசங்கரியின் சாதனைக்கு ரகசியமானது.

2022 ஆசிய விளையாட்டு வெற்றியாளரான சிவசங்கரி நிபுணத்துவ ஸ்குவாஷ் சங்கம் பி.எஸ்.ஏ.வின் உலக சுற்றுப்பயண போட்டியில் தங்கம் வென்றார்.

இந்த வெற்றிக்கு தமது அமைதியான அணுகுமுறை, இதர அழுத்தங்களில் சிக்கில் கொள்ளாமல் இருந்ததே முக்கியக் காரணம் என்று அவர் கூறினார்.

இந்த மனநிலையை இனிவரும் போட்டிகளிலும் தாம் தொடரப்போவதாக சிவசங்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

உலகத் தரவரிசையில் முதல் 13ஆவது இடத்தில் இருக்கும் அவர் உலகின் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் மூவரை தோற்கடித்து ஸ்குவாஷ் விளையாட்டு உலகை அதிரவைத்தார்.குறிப்பாக, உலகின் முதன்நிலை ஆட்டக்காரரான எகிப்தின் நோர் எல் ஷெர்பினியை வீழ்த்தி புருவம் உயர்த்த வைத்தார்.

அரையிறுதியில், நான்காம் நிலை ஆட்டக்காரரைத் தோற்கடித்த சிவசங்கரி இறுதி ஆட்டத்தில் எகிப்தின் மற்றொரு வீராங்கனையான எல் ஹமாமியையும் வீழ்த்தி அப்போட்டியின் வெற்றிக்கு தாமே மிகவும் தகுதியானவர் என்பதையும் நிரூபித்துள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு 17,598 அமெரிக்க டாலர் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது.

தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், ஏப்ரல் 19 முதல் 26-ஆம்தேதி வரை நடைபெறும் எல்-கௌனா அனைத்துலக பொது ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here