ஜகார்தா:
இந்தோனேசியா நாட்டின் ரான்சிகி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நிலத்திற்கு அடியில் 9.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்று அமெரிக்க புவிசார் அளவீட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.