சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி பாஜகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இருந்து விலகி இருந்த நடிகை ஆர்த்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருப்பவர் ஆர்த்தி. இவரது கணவர் பெயர் கணேஷ். இந்நிலையில் தான் நடிகை ஆர்த்தி அதிமுகவில் செயல்பட்டு வந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து நடிகை ஆர்த்தி செயல்பட்டு வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகி இருந்தார். இதற்கிடையே அவரது கணவர் கணேஷ் பாஜகவில் இணைந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நடிகை ஆர்த்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.