கோலாலம்பூர்:
“அல்லாஹூ அக்பர்” தக்பீர் முழங்க இஸ்தானா நெகாரா பள்ளிவாசலில் மாட்சிமை தங்கிய பேரரசர் தம்பதியினர், பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இன்று காலை நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்தானா நெகாராவில் சுமார் 400 பேருடன் நடந்த இந்த தொழுகைக்கு மாட்சிமை தங்கிய மாமன்னன் சுல்தான் இப்ராஹிம் தலைமை தாங்கினார். அத்துடன் பேரரசியார் ராஜா ஸரித் சோபியாவும் பங்கேற்றார்.
மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அவர்களது துணைவியார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.