ஒலிம்பிக் போட்டி  வியூகங்களைக் கண்டறியும் பெர்லி டான் – தீனா

அதிகாரப்பூர்வமற்ற முறையில் 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதை அடுத்து தேசிய மகளிர் பூப்பந்து இணையர்களான எம். தீனா – பெர்லி டான் இருவரும் இந்த மிகப்பெரிய போட்டியில் மாறுபட்ட விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் முயற்சியில் சிறந்த வியூகங்களைக் கண்டறிவதில் கவனம்  செலுத்தி வருகின்றனர்.

வெளிக்காட்டும் விளையாட்டுத் திறனின்  மாற்றுத் தய்மையை மீண்டும் அடையாளம் காண பயிற்றுநர்களுடன் இணைந்து வியூகங்களைத் தாங்கள் கட்டமைத்து வருவதாக பெர்லி டான் கூறினார்.

குறிப்பாக எங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அடையாளம் காண்பதற்கு காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதிலும் இதற்கு முன் களம் இறங்கிய சில ஆட்டங்களில் செய்த தவறுகள் குறித்தும்  பயிற்றுநர் எங்களுடன் கலந்துரையாடி இருந்தார்.

முதல் ஆட்டத்தில்  வெற்றி பெற்று முன்னிலை வகித்ததும் நிலையான தோல்வி  காண்பது குறித்தும் பேசப்படுகிறது.

முடிந்த வரை இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை  நாங்கள் கண்டறிந்து வருகிறோம் என்று புக்கிட் கியாரா மலேசிய பூப்பந்து அகாடமி பயிற்சி நேரத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம்  (வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது) பயிற்றுநரிடம் இருந்து நாங்கள் எதுவும் கேள்வியுறவில்லை. காரணம் அவர்கள் 2024 உபர் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு விளையாட்டாளர்களைத் தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று 24 வயதான பெர்லி டான் கூறினார்.

இதனிடையே ஒலிம்பிக் போட்டிக்கு முன்  எத்தனை ஆட்டங்களில் களம் இறங்கப் போகிறீர்கள் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இவை சார்ந்த அனைத்து முடிவுகள் அனைத்தையும் பயிற்றுநரிடம் விட்டு  விடுகிறோம்.

எனவே மைதானத்தில் எங்களின் விளையாட்டுத் திறன் குறித்து அவர்கள் நன்கு  தெரிந்து வைத்திருப்பர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here