மஇகாவில் இருந்து நீக்கப்பட்ட அவ்தார் சிங்: தனது பதவி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய போவதில்லை

கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்ட சிலாங்கூர் மஇகா தலைவர் ஒருவர், அவரை நீக்கியதற்கு மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் அது “நேர விரயம்” என்று கூறினார். கட்சித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை விமர்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர் அவ்தார் சிங் நீக்கப்பட்டார்.

அவரது காணொளி வெளியிடப்பட்ட சில மணிநேரங்களில் வெளியிடப்பட்ட பதவி நீக்க கடிதத்தில், பதவி நீக்கத்தற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மேல் முறையீடு செய்தாலும் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நான் ஏற்கெனவே அறிந்திருந்தும் நான் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார்.

கட்சியில் துணைத்தலைவரான எம்.சரவணனை எதிர்த்துப் பேசுவதற்குத் தகுதியானவர்கள் யாரும் இல்லை என்றும் தலைவரிடம் நான் கேள்வி எழுப்பிய காணொளியை வெளியிட்ட ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் எனக்கு வெளியேற்றக் கடிதத்தை அனுப்பினர்.

தலைவர் ஒரு நியாயமான அறிக்கையை வெளியிடவில்லை என்று நாம் நினைக்கும் போது அவரை விமர்சிக்கக்கூட முடியாத நிலையில் இது என்ன வகையான ஜனநாயகக் கட்சி. அவர்களால் கட்சியை தங்களிடம் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்றார். கட்சியின் அரசியலமைப்பை மீறியதாகக் கூறி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவ்தார் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கம் கடிதத்தில், அவ்தார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இப்போது வைரலாகும் வீடியோவில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு எம் சரவணனுக்கு சவால் விடுவதைத் தடுக்க விக்னேஸ்வரன் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அவதார் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் சரவணனுக்கு இணையான “ஹீரோ” இல்லை என்ற தலைவரின் கூற்றை அவமானம் என்று கூறிய அவர், கட்சித் தலைவர்களுக்கான தேர்தலை வெளிப்படையான நடத்துமாறு சவால் விடுத்தார்.

தான் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் எந்த ஒரு காரணக் கடிதமும் வழங்கப்படாததால், தனது நீக்கியது நியாயமற்றது என்று கூறினார்.  40 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ஒரு கட்சியிடமிருந்து பெற்ற வெகுமதியால் தான்  ஏமாற்றமடைந்ததாகக் கூறினார். அவ்தார் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது பூச்சோங் மஇகா பிரிவு தலைவராக இருந்தார்.

என் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கை நான் மஇகாவிற்காக கொடுத்துள்ளேன். அவர்கள் உறுப்பினர்களை இப்படித்தான் நடத்துகிறார்கள். அது மதிப்புக்குரியதாக இல்லை என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here