கோலாலம்பூர்:
இன்று இரவு 9 மணி வரை சபா, சரவாக் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
கெடாவின் பாடாங் தெராப், கோலா மூடா, சிக் மற்றும் பாலிங் பகுதிகளில் மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பேராக் (கேரியஅன், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், மாஞ்சுங், மத்திய பேராக், பாகன் டத்தோ மற்றும் லோயர் பேராக்); மற்றும் கிளாந்தானில் உள்ள கோலாக்கிராய் போன்ற பகுதிகளும் இந்த வானிலையை எதிர்நோக்கும் என்றும் கூறப்படுகிறது.





















