உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை: பறிபோன 26 வயது இளைஞரது உயிர்

புதுவை:

உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது புதுவையைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை பம்மல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் உள்ள கொழுப்பை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். எனினும், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே ஹேமச்சந்திரன் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதை ஏற்காத ஹேமச்சந்திரனின் குடும்பத்தார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here