சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாடினில் புழுக்கள்? ; 16,320 கிலோ சாடின்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு:

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின்னில் அடைக்கப்பட்ட சாடினில் அனிசாகிஸ் எஸ்பிபியா என்ற ஒட்டுண்ணி புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 27 அன்று, பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச் சாவடியில் இந்த ஒட்டுண்ணி புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்வது கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.

அதனைத் தொடர்ந்து, ஜோகூர் மகிஸ் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையில், சுமார் RM84,000 மதிப்புள்ள 16,320 கிலோ சாடின் டின்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சரக்குகளை ஏற்றிச் சென்ற லோரி, முறையான இறக்குமதி அனுமதியின்றி செயற்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த பறிமுதல்கள் செய்யப்பட்டது.ல் என்று, ஜோகூர் Maqis இயக்குனர், எடி புத்ரா முஹமட் யூசூப் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட சாடின் வகைகளின் மாதிரிகள் வேதியியல் துறைக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது என்றும், அவற்றில் குறித்த ஆபத்தான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருப்பதை வேதியல் துறை உறுதிப்படுத்தியது என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here