கோம்பாக்கில் போலி குடியேற்ற முத்திரைகள் தயாரித்ததாக நான்கு வெளிநாட்டினர், உள்ளூர் பெண் கைது

கோலாலம்பூர்:

குடியேற்ற முத்திரை மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு வெளிநாட்டு ஆண்களையும் ஒரு உள்ளூர் பெண்ணையும் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவல்துறை குழுவால் மதியம் 12.25 மணிக்கு கைது செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் நசீர், தெரிவித்தார்.

“சிலாங்கூர், கோம்பாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த முதல் சோதனையில், 27 வயதுடைய ஒரு வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டார், மேலும் சோதனைக்குப் பிறகு, போலி குடியேற்ற முத்திரைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை போலீசார் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர்,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here