காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஆடவருக்கு 30 ஆண்டுகள் சிறை

புத்ராஜெயா: தனது காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த ஆடவர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை  30 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைத்து கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட், டத்தோ நோர்டின் ஹாசன் மற்றும் டத்தோ வசீர் ஆலம் மைடின் மீரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு, ஷாருல் நிஜாம் முகமட் ஷா 52 அக்டோபர் 8, 2008 முதல் சிறைத் தண்டனையை அனுபவிக்க ஒருமனதாக முடிவெடுத்தனர்.

மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மாற்றப்படுகிறது என்று தெங்கு மைமுன் தீர்ப்பளித்தார். ஷாருலின் தரப்பு வழக்கறிஞர் ஆர். சுபாஷ் தனது வாடிக்கையாளரின் சிறைத்தண்டனையை 30 ஆண்டுகளாக நிர்ணயிக்க விண்ணப்பித்ததை அடுத்து இந்த தீர்ப்பு வந்தது. தனது வாடிக்கையாளர் 16 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக அவர் கூறினார். துணை அரசு வக்கீல் டெட்ராலினா அகமது பௌசி ஷாருலின் விண்ணப்பத்தை எதிர்க்கவில்லை.

மார்ச் 2010  ஷா ஆலம் உயர் நீதிமன்றம், ஷாருல் தனது சக ஊழியராக இருந்த நூருல் ஹசிரா பாரும் 26, அவள் வேறொரு நபரை திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிந்த பிறகு, அவரைக் கொலை செய்ததாகக் கண்டறிந்தது. அக்டோபர் 7, 2008 அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ரவாங் குவாங்கில் உள்ள கம்போங் கோம்பாக்கில் உள்ள தனது வாடகை வீட்டில் அவர் குற்றத்தைச் செய்தார்.

மே 9, 2012 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஷாருல் தனது மேல்முறையீட்டில் தோல்வியுற்றார். மேலும் கூட்டரசு நீதிமன்றம் தண்டனை மற்றும் மரண தண்டனையை உறுதி செய்தது. ஷாருல் தனது வாதத்தில், தானும் நூருல் ஹசிராவும் “ரோமியோ ஜூலியட் போல” விஷம் குடித்து தற்கொலை செய்ய திட்டமிட்டதாக சாட்சியம் அளித்தார். நூருல் ஹசிரா தன்னை முதலில் விஷம் குடிக்க வற்புறுத்தியதாக அவர் கூறினார். அவர் மயக்கமடைந்துவிட்டதாகவும் தான் எழுந்தபோது, ​​அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும்  தான் உதவிக்காக பக்கத்து வீட்டிற்கு ஓடியதாக கூறினார். ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவில் அவர் கழுத்தை நெரித்து இறந்ததாகவும், உடலில் விஷம் எதுவும் இல்லை என்றும் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here