கோலாலம்பூர்:
பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் முஹமட் சுக்ரி ரம்லி இன்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சாட்சியமளிக்க வந்தபோது, கைது செய்யப்பட்டார்.
அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெர்லிஸ் மந்திரி பெசார் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கைதை MACCயின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.