சின்னத்திரையில் களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு!

இரண்டாவது இன்னிங்ஸில் நடிகர் வடிவேலுக்கு சினிமா கைக்கொடுக்காத நிலையில், சின்னத்திரைக்குத் தாவியுள்ளார். இந்த விஷயம் அவரது ரசிகர்கள் மத்தியில் ‘உச்’ கொட்ட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரெட் கார்ட் பிரச்சினைக்குப் பிறகு நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால், அந்தப் படம் அவருக்குப் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. இதன் பிறகு வந்த ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி2’ போன்ற படங்களிலும் அவரது நடிப்புக்கு வரவேற்பு இருந்ததே தவிர பழைய வடிவேலுவை காணலயே என்றே ரசிகர்கள் சொல்லி வந்தனர்.

வடிவேலு கைவசமும் இப்போது சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் பெரிதாக இல்லை என்பதால், சின்னத்திரைக்குத் தாவியுள்ளார் வடிவேலு. ‘எப்படி வாழ்ந்த மனுசன்யா’ கதையாக வடிவேலுவின் இந்த நிலையைப் பார்த்து ரசிகர்கள் ‘உச்’ கொட்டி வருகின்றனர்.


அதாவது, சன் தொலைக்காட்சியில், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக ‘டாப் குக்கு, டூப் குக்கு’ என்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை களமிறக்கி இருக்கிறார்கள். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் இருந்த பலரையும் இதில் பார்க்க முடிகிறது.

இந்த நிகழ்ச்சியில்தான் நடிகர் வடிவேலுவை அழைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்றால் நிகழ்ச்சியின் மைலேஜ் கூடும் என்பதால் இந்த முடிவாம். அதுவும் இல்லாமல் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி மீது தனிப்பட்ட பாசம் கொண்டவர் வடிவேலு. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால், இந்த நிகழ்ச்சியில் வடிவேலு சன் தரப்பு அழைப்பு விடுத்ததும் உடனே ஒத்துக் கொண்டாராம்.

ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி வரை வடிவேலுவின் சம்பளம் என்பது பலரையும் மலைக்க வைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here