‘மலேசியாவுக்கு நன்றி’ தன்னார்வ அடிப்படையில் தாயகம் திரும்பும் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கு நன்றி சொல்லிவிட்டு தன்னார்வ அடிப்படையில் 300 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தி தாயகம் திரும்பும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கோலாலம்பூர் குடிநுழைவு இலாகா தெரிவித்தது.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி நிறைவு பெரும் இத் திட்டத்தின் கீழ் தன்னார்வ முறையில் வெளியேறுவதற்கு மனு செய்யும் வகையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கோலாலம்பூர் குடிநுழைவு இலாகா அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

இத்திட்டம் 2024 மார்ச் மாதம் தொடங்கியது. குடிநுழைவு சட்டவிதிகளை மீறியவர்கள் குறைக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திவிட்டு தாயகம் திரும்புவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 27,000 பேர் மனு செய்துள்ளனர். இதன் வழி 13.12 மில்லியன் ரிங்கிட் வசூல் செய்யப்பட்டிருக்கிறது என்று கோலாலம்பூர் குடிநுழைவு இலாகா இயக்குனர் வான் முஹம்மட் சவ்பி வான் யூசோப் கூறினார்.

கூடுதல் நாட்கள் தங்கியது, விசா நிபந்தனைகளை மீறியது போன்றவை இதில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here