மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் மே 7-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக குஜராத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி காங்கிரஸ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பலவீனமான காங்கிரஸ் அரசு தீவிரவாதத்திற்கு தேவையான உதவிகளை செய்தது. ஆனால் வலிமையான எங்கள் அரசோ தீவிரவாதிகளை அவர்களது இடங்களுக்கே சென்றது ஒழித்து வருகிறது.” என கூறியுள்ளார்.
தொடர்ந்து, “இன்று இந்தியாவில் காங்கிரஸ் மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. அழிந்து வரும் காங்கிரஸை பார்த்து பாகிஸ்தான் கண்ணீர் வடிக்கிறது. ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் ரசிகராக இருக்கும் காங்கிரஸின் குட்டு இப்போது வெளிவந்துள்ளது.” என குற்றஞ்சாட்டினார்.
மேலும், “காங்கிரஸ் அவர்களை அன்பின் கடை என நினைத்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் போலியான தொழிற்சாலை என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தாது ஏன்?. இந்தியாவை பிரிக்க காங்கிரஸ் கனவு கண்டிருக்கும் போது இந்தியாவை இணைக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நான் இன்று நனவாக்கி வருகிறேன்.” என பிரதமர் மோடி கூறினார்.