சென்னை: ‛‛நல்லா ஸ்ட்டராங்கா பேசுறீங்க.. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது’’ என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா, என்னிடம் எந்த அரசியல் கட்சிகளுமே கேட்கவில்லையே என கூறியது கவனம் பெற்றது. இந்த வேளையில் அரசியல் கட்சி அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு ஜோதிகா கூறிய பதில் தொடர்பான வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகை ஜோதிகா மீண்டும் திரைத்துறையில் 2வது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். நடிகர் சூர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறது. நடிகர் அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஷைத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ. 200 கோடி ரூபாய்க்கு (2 மில்லியன் ரிங்கிட்டிற்கு) மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதையடுத்து ஸ்ரீகாந்த் என்ற படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா பங்கேற்றார். அப்போது அவரிடம், ‛‛அரசியலில் என்ட்ரி கொடுப்பீர்களா?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நல்லா ஸ்ட்ராங்க பேசுறீங்க.. நல்லா தைரியமா ஃபைட் பண்றீங்க.. இந்த மாதிரி இருக்கும்போது அரசியல் வந்தால் கையில் பவர் அதிகம் இருக்கும். ஏன் நீங்கள் அரசியலுக்கு வரக்கூடாது? அரசியலுக்கு வரும் ஐடியா எதுவும் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டதும் நடிகை ஜோதிகா புன்முறுவல் செய்தார்.
அதன்பிறகு அவர் பதிலளிக்கையில், என்னை யாருமே கேட்கவில்லை என்றார். அதாவது தன்னை எந்த அரசியல் கட்சியும் அழைக்கவில்லை என்பதை தான் அவர் இப்படி கூறினார். இந்த வேளையில் பத்திரிகையாளர், ‛ஏதாவது கட்சியில் இருந்து கேட்டால் அரசியலில் சேர்ந்து விடுவீர்களா?’’ என்று பதில் கேள்வி கேட்டார்.
அதற்கு ஜோதிகா, அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க.. போர்ட் எக்ஸாம் இருக்கு. சினிமாவில் நடித்து கொண்டே குழந்தைகளையும் கவனித்து வருகிறேன். பிட்னஸ்ஸிலும் கவனம் செலுத்துகிறேன். இதனால் அரசியல் வருவதற்கு வாய்ப்பில்லை.வாய்ப்பே இல்லை என முற்றுப்புள்ளி வைத்தார்.