அலோர் ஸ்டார்:
நேற்று குனுங் கெரியாங் மலையேற்றத்தின் போது தொலைந்து போனதாக தேடப்பட்ட மூன்று இளைஞர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலை வழிகாட்டிகளால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
நேற்று மாலை 6.02 மணிக்கு சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே தமது பணியாளர்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை செயல்படுத்தியதாகவும் கோத்தா ஸ்டார் ஜேபிபிஎம் மண்டலம் 1, மூத்த தீயணைப்புத் தலைவர் 1 அமாட் அமினுடின் அப்துல் ரஹீம் கூறினார்.
“பாதிக்கப்பட்ட மூன்று பேரில் – 19 வயது ஆண் மற்றும் 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும் அடங்குவர் என்றும், மலையின் அடிவாரத்தில் இறங்கும்போது அவர்கள் தொலைந்து போனதாக நம்பப்படுகிறது என்றும் அவர் இன்று வியாழக்கிழமை (மே 9) வெளியிட்டுள்ள ஓர்அறிக்கையில் கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட மூவரும் சோர்வடைந்த நிலையில் இருந்ததாகவும், அவர்கள் பின்னர் சிகிச்சைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.