த்ரிஷாவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் ஒரே விஷயத்தால் தீராத பிரச்சனை

நடிகைகள் த்ரிஷாவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் ஒரே விஷயத்தில் தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது. இருவருமே விளக்கம் அளித்தும் கூட அந்த பிரச்சனை முடிவதாக இல்லை. இதற்கு ஒரு என்டு கார்டே இல்லையா என கேட்கும் அளவுக்கு இருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவுக்கு என்னப்பா பிரச்சனை இருக்கப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். அவருக்கு ஒரு பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. அதாவது மொரட்டு சிங்கிளாக இருக்கும் த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது.
திருமண விவகாரம் குறித்து த்ரிஷா விளக்கம் அளித்தும் கூட அந்த வதந்தி பரவுவது நிற்பதாக இல்லை. ஒவ்வொரு முறை வதந்தி பரவும்போதும் மாப்பிள்ளை மாறிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது உறவுக்காரருக்கும், த்ரிஷாவுக்கும் திருமணம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த திருமண வதந்தி பிரச்சனை த்ரிஷாவுக்கு மட்டும் இல்லை கீர்த்தி சுரேஷுக்கும் தான் இருக்கிறது. த்ரிஷா கூட பரவாயில்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு கீர்த்தியை பற்றி அடிக்கடி வதந்தி பரவுகிறது. கீர்த்திக்கும், பள்ளி காலத்து காதலருக்கும் திருமணம், கீர்த்தி சுரேஷுக்கும் துபாய் காதலருக்கும் திருமணம், கீர்த்திக்கும் பாஜக நிர்வாகியின் மகனுக்கும் திருமணம், கீர்த்திக்கும் தொழில் அதிபருக்கும் திருமணம், கீர்த்திக்கும் நகைக்கடைகாரர் மகனுக்கும் திருமணம் என டிசைன் டிசைனாக வதந்தி பரவுகிறது.
எங்கள் மகளுக்கு தற்போதைக்கு திருமணம் இல்லை என கீர்த்தியின் அப்பா சுரேஷ் விளக்கம் கொடுத்தும் கூட பலனில்லை. தன்னை பற்றி வரும் திருமண வதந்திகளை எல்லாம் பார்த்து கீர்த்தியே குபீரென்று சிரித்தாலும் சிரிப்பார். அந்த அளவுக்கு பலமுறை திருமண தகவல் வெளியாகிவிட்டது.

த்ரிஷாவோ, கீர்த்தி சுரேஷோ தங்களுக்கு திருமணம் முடிவானால் அவர்களே நிச்சயம் அறிவிப்பு வெளியிடுவார்கள். அப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளியே இல்லை போன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here