பேராக்கில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆகக் குறைந்தது

ஈப்போ:

பேராக்கில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை இன்று காலை ஓரளவு மேம்பட்டது.

நேற்றிரவு 163 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 29 குடும்பங்கலைச் சேர்ந்த 100 பேராகக் குறைந்துள்ளது என்று, பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் அங்குள்ள ஐந்து நிவாரண மையங்களில், அதாவது தைப்பிங் மாவட்டத்தில் நான்கு மற்றும் கோல கங்சாரில் ஒன்றுமாக உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

மேலும் FT 004 ஜாலான் ராயா திமூர் பாராட் மற்றும் FT 1152 பெல்டா ரோலாக் செலாத்தான் ஆகிய இரண்டு சாலைகளும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here