கோலாலம்பூர்:
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று (மே 20) நிலவரப்படி, 2,441 அமெரிக்க டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இது புதிய வரலாற்று உச்சமாகும். இதன் எதிரொலியாக மலேசியா, சிங்கப்பூர் உட்பட, உலகச் சந்தைகளில் தங்கத்தின் விலை தடாலடியாக ஏறியுள்ளது.
இன்று மலேசியாவில் 22 கரட் (916) ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 336 ரிங்கிட்டாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 366 ரிங்கிட்டாகவும் விற்கப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கி 2024ன் நாணயக் கொள்கையை தளர்த்தும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதாலும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது என்று கூறப்படுகிறது.





















