ஈகைத்திருநாளை முன்னிட்டு கூடுதல் KTM ரயில் சேவை

கோலாலம்பூர்:

ஈகைத்திருநாளை முன்னிட்டு KTMB நிறுவனம் நான்கு கூடுதல் மின்சார ரயில் சேவை (ETS) ரயில்களை தயார் செய்துள்ளது.

அவை பாடாங் பெசார்-KL சென்ட்ரல் மற்றும் அதன் திரும்பும் பயணத்திற்கு தலா இரண்டு, அதே போல் KL சென்ட்ரல்-பட்டர்வொர்த் மற்றும் அதன் திரும்பும் பயணத்திலும் அவை ஈடுபடும் என்று KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாண்டாங்-பெசார்-KL சென்ட்ரல் வழித்தடத்தில் ஜூன் 13 முதல் 18 வரை மற்றும் ஜூன் 21 முதல் 23 வரை ஒன்பது நாட்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று KTMB இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

மேலும் “பிசினஸ் கிளாஸ் கோச் உட்பட மொத்தம் 9,450 கூடுதல் டிக்கெட்டுகள் நாளை (மே 26) மதியம் 3 மணி முதல் விற்கப்படும். இது பண்டிகை காலங்களில் ஏற்படும் அதிக தேவையை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் உதவும் என்றும் அது தெரிவித்துள்ளது.

“பொதுமக்கள் தங்கள் டிக்கெட்டுகளை KTMB மொபைல் (KITS) செயலி அல்லது நேரடியாக KTMB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here