தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.. புது வகை எபோலா வைரசை உருவாக்கி டெஸ்ட்.. அதிர வைத்த சீன விஞ்ஞானிகள்

 மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எபோலோ வைரசின் சில பாகங்களை எடுத்து புது வைரஸ் ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எபோலோ வைரசின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இதனை வெள்ளெலிகளுக்கு செலுத்தி சீனா சோதனை செய்துள்ளது.

கொரோனா என்னும் பெருந்தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு உலகையே உலுக்கியது. இந்த கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் இருந்து தான் வெளிப்பட்டது. கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகம் ஒன்றில் இருந்து தான் பரவியது என குற்றச்சாட்டு எழுந்தது.

சீனா புதிய ஆய்வு: ஆனால், இந்த தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. பெரும் பொருளாதார முடக்கம் , 70 லட்சம் உயிர் பலிகள், பணியிழப்பு என மிகப்பெரிய பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னமும் மக்கள் மனதை விட்டு மறையவில்லை. இது ஒருபக்கம் இருக்க சீனாவோ, அவ்வப்போது புதிய ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

எபலோ வைரஸ்: இந்த நிலையில்தான், கொடிய எபோலா வைரஸ் மற்றும் அதன் அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக சீன விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது எபோலா வைரசின் பாகங்களை பயன்படுத்தி புதிய வகை வைரஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

எலிகளுக்கு வைரசை செலுத்தி சோதனை: சீனாவின் ஹீபே மருத்துவ பல்கலைக்கழககத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு குறித்த விவரங்கள் சயின்ஸ் டைரக்ட் என்ற இதழில் வெளியாகியுள்ளது. எபோலோ வைரசின் தன்மை மற்றும் அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது எலிகளுக்கு வைரசை செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

இதில் கொடூரமான அறிகுறிகளுடன் மூன்றே நாளில் இந்த எலிகள் இறந்துவிட்டனவாம். எபோலோ நோய் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது போன்று எலிகளுக்கு கொடூர பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சில வெள்ளெலிகளுக்கு இந்த வைரசை செலுத்திய பிறகு கண்பார்வை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

சீனா விளக்கம்: கொரோனா வைரசே இத்தகைய ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் வெளியுலகத்திற்கு பரவியது என்ற அச்சம் இருந்து வரும் நிலையில், சீனா ஆராய்ச்சியாளர்கள் தற்போது நடத்தி வரும் ஆய்வு எதற்காக என்றும் தங்களின் நோக்கம் என்ன என்பதும் குறித்தும் விளக்கியுள்ளனர். சீன ஆய்வாளர்கள் vesicular stomatitis virus என்ற வேறுபட்ட வைரஸ்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எபோலா வைரஸின் ஒரு பகுதியை எடுத்துச் செல்ல இதை உருவாக்கியிருக்கிறார்கள். கிளைகோபுரோட்டீன் (GP) என அழைக்கப்படும் இது, வைரஸ் எப்படி நுழைகிறது? செல்களை எப்படி பாதிக்கிறது? என்பதை கண்டுபிடிக்க மிகமுக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தனர். ஐந்து ஆண் வெள்ளெலிகள் மற்றும் பெண் வெள்ளெலிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் நோக்கம் என்ன?: இத்தகைய விபரீத ஆய்வு மேற்கொள்வதன் நோக்கமே, ஒரு ஆய்வக அமைப்பில் கொரோனா வைரசின் அறிகுறிகளை பாதுகாப்பாக காட்டும் சரியான விலங்கு எது என்பதை கண்டுபிடிப்பதுதான் என்று சீன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எபோலா வைரஸ் போன்ற கொடிய வைரஸ்களுக்கு உயிரியல் பாதுகாப்பு நிலை 4 (BSL-4) என்ற அதிநவீன ஆய்வகங்கள் தேவை. எனினும், உலக அளவில் உள்ள பல்வேறு ஆய்வகங்களும் BSL-2 என்ற நிலையில்தான் உள்ளன.

தங்களின் ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததாகவும், BLS-2 நிலைகளில் எபோலாவிற்கு எதிரான சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் ஆரம்ப நிலையில் துரிதமான மதிப்பீட்டு சோதனை முடிவுகளில் தெரியவந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த 2014 – 2016 ஆம் ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here