ராமேஸ்வரி ராஜா
கூச்சிங்:
கடந்த சனிக்கிழமை முதல் தேசிய ஊடகவியலாளர்கள் தினம் (ஹவானா) 2024 இன் கொண்டாட்டம் சராவக், கூச்சிங்கில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகின் அதன் உச்ச மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்.

இங்குள்ள ஒரு ஹோட்டலில் நடைபெறும் இந்த மிளிரும் நிகழ்வில் சரவாக் பிரிமியர் டத்தோ பாதிங்கி டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓப்பெங், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் அடங்கிய சுமார் 1,000 விருந்தினர்களும் கலந்துகொள்வார்கள்.

பிற்பகல் சுமார் 3 மணிக்கு நடைபெறவிருக்கும் உச்சக்கட்ட நிகழ்வில், பிரதமர் வழங்கப்போகும் செய்தி கவனம் செலுத்தும் வகையில் நிச்சயம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் ஹவானா 2024 விருது மற்றும் ‘தபுங் காசிஹ் ஹவானா’ (Tabung Kasih@HAWANA) உதவியை தேவைப்படும் பெறுநர்களுக்கு வழங்குவார்.
இதற்கிடையில், இங்குள்ள பிளாசா மெர்டேகாவில் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் ஹவானா 2024 கண்காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் செல்வோம் ‘ஜூஹ் ராமி-ராமி நங்கக்’ எனும் அழைப்பின் பேரில் அதிகமானோர் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.
கூடுதலாக, சரவாக் மீடியா கான்பரன்ஸ் (SMeC) 2024 மற்றும் உள்ளூர் பேச்சுவழக்கில் ‘நடைபயிற்சி செல்வோம்’ என்று பொருள்படும் ‘ஜூஹ் ரான்’ ஆகியவை நடைபெற்றன, இது கூச்சிங் நகரைச் சுற்றியுள்ள சுவாரஸ்யமான இடங்களை ஆராய பங்கேற்பாளர்களை அழைத்துச் செல்லும் நடவடிக்கையாக இருந்தது.

நேற்று, ஹவானா 2024 பங்கேற்பாளர்கள் மேதகு சரவாக் ஆளுநர் சரவாக் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் வழங்கிய இரவு விருந்தில் கொண்டாடப்பட்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.
























