SPM 2023: தேர்வுக்கு தகுதி பெற்றவர்களில் 10,160 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை- கல்வி அமைச்சு

கோலாலம்பூர்:

டிவம் ஐந்து மாணவர்களுக்கான 2023 தேர்வில், அதற்கு தகுதி பெற்ற சுமார் 10,169 மாணவர்கள் தேர்வுக்கு அமரவில்லை என்ற அதிர்சி செய்தி வெகியாகியுள்ளது.

இது அதிக எண்ணிக்கையாக இருந்தாலும், 2022-ஆம் ஆண்டு தகுதிபெற்ற மொத்தம் 388,832 மாணவர்களில் மொத்தம் 14,858 பேர் தேர்வெழுதவில்லை. அதனுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கல்வி துறை இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

இன்று (மே 27) SPM 2023 முடிவுகள் பகுப்பாய்வை அறிவித்த பிறகு, “மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றாததற்கான காரணங்களை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்வோம்” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மொத்தம் 395,870 பரீட்சார்த்திகள் SPM பரீட்சைக்கு தோற்றியிருந்தனர், அதில் 11,713 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “ஏ” தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2022-ஆம் ஆண்டுக்கான சராசரி அடைவுநிலையோடு ஒப்பிடும் போது, 2023-ஆம் ஆண்டுக்கான அடைவுநிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here