மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி! நீதிமன்ற உத்தரவால் ஜெர்மனில் களைகட்டும் நீச்சல் குளங்கள்

பெர்லின்: ஜெர்மனியில் நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் அவரை வெளியேற்றியது தவறு என்று கூறியுள்ளது.

இதனையடுத்து பெண்கள் மேலாடையின்றி குளிக்க சம்பந்தப்பட்ட நீச்சல் குளம் அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் பெர்லினில் உள்ள அனைத்த நீச்சல் குளங்களிலும் இந்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், “இளம்பெண் ஒருவர் இங்குள்ள நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளித்திருக்கிறார். பின்னர் அதே நீச்சல் குளத்தில் “சன் பாத்” எடுத்திருக்கிறார். ஆனால், அவர் இதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். எனவே, அப்பெண் நீதிமன்றத்தை நாட, பாலின பாகுபாடுகள் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பாலின பாகுபாடு இல்லாமல் இருக்க புதிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்பட இருக்கிறது. இவை கடந்த ஆண்டு வந்த உத்தரவு” என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் நீச்சல் குளத்தின் அனுமதி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர், இப்படியான உத்தரவு தவறு என்று கூறுகின்றனர். வேறு சிலர் சரி என்றும் கூறுகின்றனர். குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதாவது, “பெண்கள் எப்படி குளிக்க வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட உரிமை. அதே நேரம் இந்த ஆண்டுகளாக சினிமாக்கள், கதைகள் மற்றம் இதர ஊடகங்கள் மூலம் பெண்கள் குறித்து போகப்பொருளாகவும், அவர்களின் மார்பகங்களை பாலியல் கவர்ச்சிக்கான ஒன்றாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது உடைக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் இந்த உத்தரவு பொருத்தமானதாக இருக்கும். இல்லையெனில் மேலாடையின்றி குளிக்கும் பெண்கள் போகப்பொருளாகத்தான் கண்களுக்கு தெரிவார்கள் என்று கூறியுள்ளனர். உடலுக்கான உட்சபட்ச தேவை என்பது இனப்பெருக்கம்தான். ஆனால், இதே உடலை மோகமாக்கி, அதை நுகர்வு பொருளாக்கியுள்ள சூழல் மாற வேண்டும் என்றும் அதே நேரம் அரசுகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here