பினாங்கில் இந்த ஆண்டு டிங்கி காய்ச்சலால் ஒன்பது இறப்புகள் பதிவு

ஜார்ஜ் டவுன்:

பினாங்கில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 20 வரை டிங்கி காய்ச்சல் காரணமாக ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன.

2023 ஆம் ஆண்டின் 47 வது தொற்றுநோயியல் வாரம் வரை, பினாங் மாநிலத்தில் 6,720 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் தெரிவித்தார்.

“மத்திய செபெராங் பிறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,286 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தென் செபெராங் பிறையில் 1,175 சம்பவங்கள், வடகிழக்கு செபெராங் பிறையில் 1,160 சம்பவங்கள், தென்மேற்கு செபெராங் பிறையில் 660 சம்பவங்கள் மற்றும் வட செபெராங் பிறையில் 439 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக இன்று நடந்த மாநில சட்டப் பேரவையில் அவர் தனது இறுதி உரையில் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here