எண்டர்பிரைஸ் 50 கிழக்குக்கரை பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

கோலதிரெங்கானு:

வ்வாண்டு தொடக்கத்தில் எஸ்எம்இ கார்ப் தரப்பால் முன்னெடுக்கப்பட்ட எண்டர்பிரைஸ் 50 விருது நிகழ்ச்சி அறிமுகத்திற்குப் பின்னால் மலேசியாவில் சிறந்த மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்முனைவோரை (50) அடையாளம் காணும் நடவடிக்கை தொடரப்படுகிறது.

குறிப்பாக கிழக்குக்கரை வட்டாரத்திற்குட்பட்ட இந்த நிகழ்ச்சியானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரெங்கானு, கிளாந்தான், பகாங் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளன.


அதிலும் இந்நிகழ்ச்சியில் மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து ஆர்எச்பி பெர்ஹாட் (வங்கி), டெலிகோம் மலேசியா, மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதியக குழுமம், ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் ஆகிய தரப்பினர் விளக்க உரையாற்றினர்.

இந்த விருது நிகழ்ச்சி ஏற்பாட்டின் வாயிலாக மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறையினர் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகிய இஎஸ்ஜி அமலாக்கத்தின் வாயிலாக சுபிட்சம் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைளை முழுமை பெறச் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இதுவரையில் இந்த விருது நிகழ்ச்சி திட்டமானது 2,225 பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு 763 வெற்றியாளர்களையும் உருவாக்கியுள்ளது. கடந்த முறை விருது நிகழ்ச்சியின் வெற்றியாளர்களுள் 67 நிறுவனங்கள் முதலீட்டுச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பதாக எஸ்எம்இ கார்ப் மலேசியா தலைவர் டான்ஸ்ரீ பெர்னாட் கிலுக் தெரிவித்தார்.

அதேபோல் இந்த விருது நிகழ்ச்சியானது மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறையினரை பிரபலப்படுத்தி அனைத்துலகச் சவால்களை எதிர்கொள்ளும் வல்லமையை அவர்கள் மத்தியில் ஊக்குவிக்கச் செய்துள்ளதாக எஸ்எம்இ கார்ப் தலைமைச் செயல் அதிகாரி ரிஸால் நைனி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here