1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன், யாருக்கும் காந்தியை தெரியாது” – மோடி

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், மகாத்மா காந்தி ஒரு சிறந்த ஆன்மா. கடந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது நமது பொறுப்பு அல்லவா?
தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்.

மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நிகரானவர் மகாத்மா காந்தி. காந்தி மூலமாக இந்தியா கவனம் பெற்று இருக்க வேண்டும். காந்தியின் தத்துவம் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2, அன்று குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த காந்தி, இந்தியாவின் “தேச தந்தை” என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக திகழ்ந்தவர். மகாத்மா காந்தி 1937 மற்றும் 1948 க்கு இடைப்பட்ட காலத்தில் நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

2007 ஆம் ஆண்டில், ஐநா சபை காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை ‘சர்வதேச அகிம்சை தினமாக’ அறிவித்தது. காந்தி 1969 முதல் இந்திய நாணயத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோர் தங்களது போராட்டத்திற்கு காந்தியின் வரலாறு உத்வேகம் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here