தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஹைதராபாத் என பல இடங்களில் நடந்த படபிடிப்பையடுத்து, தற்போது மும்பை படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
கோட்-சூட்டுடன் கெத்தாக சூப்பர் ஸ்டாருடன் சாஹேன்ஷா அமிதாப் பச்சன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும், அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து அன்பை பரிமாறிக்கொள்ளும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.




















