கிள்ளான்:
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மரம் விழும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது.
அவ்வகையில் இன்று (ஜூன் 4) கிள்ளானின் ஜாலான் காப்பார் பகுதியில் மரம் விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அமாட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
மரம் விழுந்த வாகனத்தில் இருந்த மூன்று பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் தாங்களாகவே வாகனங்களை விட்டு வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மரத்தை வெட்டி நகர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.