கோலாலம்பூர்:
பல ஆண்டுகளாக தனது முதலாளிகளின் கார் பதிவு எண்கள் மீது பந்தயம் கட்டி வந்த பினாங்கைச் சேர்ந்த 60 வயது ஆடவர் ஒருவர், கடந்த மே 26 அன்று RM10.6 மில்லியன் Toto 4D ஜாக்பாட் 1-ஐ வெற்றி பெற்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
பல ஆண்டுகளாக தனது முதலாளிகளின் ஐரோப்பிய கார்களின் மேல் அவருக்கும் அவரது சக ஊழியர்களும் ஒருகண் என்றும், தாமும் எப்போதாவது அவ்வாறான விலை உயர்ந்த காரை ஓட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது என்றும் கூறினார்.
அதனால் அவர்களின் கார் ப்ளேட் எண்களான – 9114 & 2230 – பல ஆண்டுகளாக பந்தயம் கட்ட ஆரம்பித்தேன், அதனால்தான் நான் ஜாக்பாட் வென்றேன்,” என்று சமீபத்தில் கோலாலம்பூரில் உள்ள STM லாட்டரி Sdn Bhd இல் தனது வெற்றிப்பணத்தை எடுக்க வந்த அவர் கூறினார்.
வறுமையின் பிடியில் இருந்துவந்த, தான் இப்போது மல்டி மில்லியனர் என்பதில் ‘மிகவும் சந்தோஷமாக’ இருப்பதாகக் கூறிய அவர், இப்போது தனது குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
வென்ற டிக்கெட், சிஸ்டம்-4 வாங்குதல், அவருக்கு RM10,627,969.15 ஐ பெற்றுக்கொடுத்தது. அத்தோடு , அவர் சிஸ்டம் ப்ளே போனஸாக கூடுதலாக RM672 பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




















