சிங்கிள் டூ மிங்கிள் ஆன பிரேம்ஜி.. தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

பிரேம்ஜிக்கு இன்று ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடந்து முடித்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றவர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here