கோலாலம்பூர்:
பினாங்கு அரசாங்கம் மாநிலத்தில் நீர் விநியோகத்தில் பாரபட்சமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக சனுசி கூறியது உண்மைக்கு புறம்பானது.
கெடா மாநில மந்திரி பெசார், முஹமட் சனுசி ஒரு பிரச்சனைக்குரிய நபர் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர் அடிக்கடி அடிப்படையற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று அவர் சொன்னார்.
மேலும் சனுசி இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஃஹ்மி கூறினார்.
இனங்களுக்கிடையே இனவெறியைத் தூண்டும் வகையில் அவரின் அறிக்கைகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்வாறு உண்மைக்கு புறம்பானவற்றை பேசுவது மாநில மந்திரி பெசார் என்ற பொறுப்பில் இருப்பவர்களுக்கு நல்ல அணுகுமுறையல்ல என்று அவர் சொன்னார்.




















