பாசிர் மாஸ்-ரந்தாவ் பஞ்சாங் ரயில் பாதை மேம்படுத்தல் பணி அடுத்த ஆண்டு தொடங்கும்- அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

பாசிர் மாஸ்-ரந்தாவ் பஞ்சாங் ரயில் பாதை மேம்படுத்தல் திட்டம் அடுத்த ஆண்டு 264 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டில் தொடங்கும்.

இதற்கு 13வது மலேசிய திட்டத்தின் ரோலிங் பிளான் 1 இன் கீழ் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் உறுதிப்படுத்தினார்.

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ரயில்வே சொத்துக்கள் கூட்டுறவு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகள் இரண்டிற்கும் இந்த பாதையை மீண்டும் செயல்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக்குடன் இணைப்பதன் மூலம் மலேசியா-தாய்லாந்து எல்லை தாண்டிய ரயில் இணைப்பு கணிசமாக மேம்படுத்தும். மேலும் குறித்த நிறுவனம் திட்டத்திற்கு தேவையான கொள்முதல் பணியை முடிந்ததும் கட்டுமானம் தொடங்கும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குள் இது முடிக்கப்படும் என்றும் லோக் விளக்கினார்.

இந்த திட்டம் மண் வேலை, பாதை மேம்பாடுகள், வேலி, நிலைய மேம்பாடுகள் மற்றும் சமிக்ஞை அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று , இன்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சகத்தின் பட்ஜெட் விவாதத்திற்கான தனது இறுதி உரையின் போது அவர் இந்த விவரங்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here